வரிசை
பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி/தொடர்ந்து வைத்தால், அவை ஒழுங்காக இருப்பதாகவும் நாம் கூறுவோம்.
ஒழுங்காக இருப்பதை நாம், கீழ் உள்ளவாறும் அழைப்பது உண்டு.
- அழகு
- அணி
- சீர்
- பாங்கு
ஒன்றன்பின் ஒன்றாய் இருக்கும் பொருட்கள், வரிகள் ஒன்றன்பின் ஒன்றாய் போல இருப்பதால் அவை வரிசை.
அமை
அமை என்பது ஒரு வினையை / செயலை குறிக்கும் சொல்.
அமைப்பதன் நோக்கம் பொருளை
- சீர் செய்யவும்
- ஒழுங்கு செய்யவும்
- ஒருங்கு செய்யவும்
- அழகுப்படுத்தும்
- அடுக்குவும்
- செம்மைபடுத்தவும் / செப்பனிடவும் தான்.
In english > அமை = to arrrange appropriately / organize
- எல்லாம் அமைந்து இருந்தால், அது அமைதி தரும்.
- அமைக்கப்பட்டது அமைப்பு / அமைவு
- அமைத்தது அமைவு
- அமைச்சு –> அமைச்சர்/ அமைச்சன்
அமை –>அமைச்சு ஆகி அமைத்தல் என்னும் வினை செய்பவனைக் குறிக்கும். (பேசு —> பேச்சு).
அமை - கிளைச்சொற்கள்
- வடிவமை - design
-
ஒரு பொருளின் வடிவை மற்றி அமைப்பது = வடிவமைப்பு
- தகவமை - adapt
- ஒரு சுழலுக்கு ஏற்றவாறு ஒரு பொருளை மாற்றிச் சீர் ஒழுங்கு செய்வதை தகவமைப்பது என்று கூறுவர்.
- உள்ளமைப்பு - structure
-
ஒரு பொருளின் உட்கூறுகள் எப்படி அமைதிருக்கிறது என்று விளக்குவது உள்ளமைப்பு
- ஒத்தமைப்பு - Consistent
- உடலமைப்பு
- சீரமைப்பு
கட்டமைப்பு
கட்டி அமைக்கப்படுவது, கட்டிடம். கட்டிடத்தில் பல உட்கூறுகள் இருக்கும், அந்த உட்கூறுகளின் உள்ளமைப்புகளைக் கட்டி அமைப்பதால் அது கட்டமைப்பு.
கட்டமைப்பு = Architecture
மென்பொறியியலின் சொல்லியல்
SYSTEM => “organized whole, a whole compounded of parts”
மேற்கூறிய அனைத்தும் மென்பொறியியலின் சொல்லியலுக்கும் பொருந்தும்.
ANALYSIS = பகுப்பாய்வு DESIGN = வடிவமைப்பு STRUCTURE = உள்ளமைப்பு ARCHITECTURE = கட்டமைப்பு
பகுப்பாய்வு செய்து, வடிவமைத்து , உள்ளமைப்புகளைச் சீர்படுத்தி, பின் கட்டமைக்கும் எல்லாப் பணிகளையும் முறைப்படி அமைத்தால் அது முறைமை. SYSTEM => முறைமை
முறைமைத்த ஒன்றை, பல கோணத்தில் இருந்து பார்க்க / நோக்க முடியும். நோக்கும் ஒவ்வொரு நோக்குநிலையிலும் புலப்படும் உள்ளமைப்பு வெவ்வேறாய் இருக்கும்.
System has multiple viewpoints , viewing / observing from each viewpoint will give the observer insight into different perspective and structure of the system.
முறைமையின் நோக்கம் / குறிக்கோள் முறைபடுத்துவது, ஒழுங்குபடுத்துவது.
ஒர் துறையின் நன்நெறிகள் வழிநடப்பதும், விதிமுறைகளைக் கடைபிடித்தலும் தான் ஒழுக்கம்(discipline).
மென்பொருள்நிரலாக்கத் துறைக்கென்று சில நன்நெறிகள் விதிமுறைகள் உண்டு. அவை இருக்கிறது என்பதை மட்டும் இப்போது தெரிந்து கொள்வோம். வேறு பதிவுகளில் அவற்றை அறியலாம்.
principle = நெறி ; rule = விதிமுறை ; guideline / methodology = வழிமுறை ; algorithm = படிமுறைத் தீர்வு ; procedure / process = செய்முறை ;
அமை என்பது வினை , வினையைச் செய்யும் வகை (வினை செயல்வகை) என் ஐயன் வள்ளுவர் சொன்னது
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல் .