Sign-Code-Shape-Form -Symbol-Character அறிமுகம்

புள்ளி

ஒரு தளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டுவது “புள்ளி”.

புள்ளி = point / dot

குறி - குறியீடு

ஒரு பொருளை உணர்த்தவதற்காக (அறிவிக்க / தெரிவிக்க ) ஒரு தளத்தில் முறைப்படி வரிகளால் இடப்படும் வடிவம் தான் குறி. இடப்படுவதால் இதனைக் குறியீடு என்ன அழைக்கலாம். எ.க.

  • ”+” இது கூட்டல் குறி
  • ”?” இது கேள்வி குறி

ஒருவர் மற்றொருவரிடம் கூறிய சொற்தொடர் ஓர் வினா என்பதை உணர்த்த ஒரு சிறிய குறி “?” போதுமானதாய் இருக்கிறது.

குறி= sign / code

உரு / வடிவம்

ஒரு பொருளின் உள் எது? புறம் எது ?என்று வரிகளால் வரைந்து வரையறுக்கப் படுத்தவேஉருவம் / வடிவம்.

உருவம் / வடிவம்= form / shape

வரையறுத்தல், சுற்றியுள்ள சூழிலிருந்து அறுத்து எடுப்பது போல (வடிகட்டி ) வேறுபடுத்தி வரிகள் சேர்ந்து காட்டும் காட்சி தான்உருவம் / வடிவம்.

சின்னம்

அடிப்படையில் சின்னம் என்பது ஒரு குறிதான். வேறுபாடு என்னவென்றால் குறி ஒரு நேர் பொருளை குறிக்கும்.

சின்னம் இடப்படுகிற சூழலை பொறுத்து , அதன் இயல்பான பொருளில் இருந்து வேறுபடும். சின்னம் ஒரு சூழலில் (ஒரு பிரிவினர் / இடம் ) அது அடையாளமாய்த் திகழும், மற்றவருக்கு அது வெறும் குறி மட்டுமே.

சின்னம் = symbol [special meaning in specific context ]

எ.க. ஒரு நாட்டின் கொடி , அந்த நாட்டுக் குடிமக்களுக்கு ஓர் அடையாளம் / சின்னம். வேறு நாட்டவரை பொறுத்தவரையில் அது வண்ணத்துணி.

ஒருவனை மற்றவரிடத்தில் இருந்தும் / ஒரு பொருளை மற்றவையில் இருந்தும் வேற்றுமைப்படுத்தி , அவனை அடைய உதவியாய் இருப்பதே “அடையாளம்”.

தமிழ் நம் தொன்ம அடையாளம், நினைவு கொள்வீர்.

எழுத்து

ஒலிப்பு ஓசைகளுக்கு இணையாய்க் கொடுக்கப்படும் வரிவடிவமே (குறியீடுயே / உருவமே ) ஒரு மொழியின் எழுத்துகள்.

எழுத்து= Letter

வரியுரு

கணிணிகளுக்கும் / பொறிகளுக்கும் மனிதர்கள் எழுதும் மொழியின் எழுத்துகள் மற்றும் வேறு சிறப்புக் குறியீடுகளைப் பொதுவாய் *வரியுருகள் * என்று அழைக்கலாம். . வரிகள் தான் உருவத்தைப் புலப்படுத்தும்.

வரியுரு = character

எழுத்துரு

ஒரு வரியுருவின் அழகையேற்ற சிறுசிறு உருவ மாற்றம் செய்தாலும், நம்மால் அந்த வரியுருவை அடையாளம்காண முடியும்.

பலரும் ஒரே வரியுருவை வெவ்வேறு விதமாய் எழுதுவர்.

கணிணியில் வெவ்வேறு விதமாய் எழுத உதவது “எழுத்துரு “ .

எழுத்துரு = font

சரம்

மலர்கள், முத்துக்கள் போன்ற சிறிய பொருட்களை நூலில்/ நாரில்/ கம்பியில் கோர்த்துப் பயன்படுத்தப்படும் சிறு மாலைகளுக்குச் சரம் என்பது பெயர்.

  • முத்துச்சரம்
  • முல்லைசரம்
  • சரவெடி

வரியுருகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு நூலில்கோர்க்கப்பட்டது போல இருப்பதை கணிணியலில்சரம் என்று கூறுவர்.

சரம் = string