Program - Algorithm அறிமுகம்

நோக்கம்

எதனை கருதி ஒரு செயலை/ வினையை செய்கிறோமோ அதுதான் அந்த செயலின் நோக்கம்.

Intention / Objective

குழந்தை நோக்குவதின் , நோக்கம் தாய்க்கு புரியாமல் இருக்குமா ?

அவளும் நோக்கினால் அண்ணலும் நோக்கினான்.

படிமுறைத் தீர்வு

  • ஆள் 1 : வெண்ணிலா மேல்நிலை பள்ளிக்கு எந்த வழியா போகணும் ?
  • ஆள் 2 : அந்த பள்ளியா ?
  • ………. : இதே சாலையில் 100 அடிக்கு நேர போங்க
  • ………. : அப்புறம் இடதுபுறம் திரும்பி 10 அடியில்
  • ………. : வலதுபுறம் திரும்புங்க
  • ………. : பள்ளி வந்துடும்.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு செல்ல நாம் படிபடியா வழி / தீர்வு சொல்வது உண்டு.

அதே உவமைதான், எந்த ஒரு செயலை சரியாக செய்ய, பல படிகளாய் வரையறுத்து, முறைபடுத்தி சிக்கலை தீர்ப்போம்.அப்படிகளின் தொகுப்பு, படிமுறைத்தீர்வு

நிரல்

  • வரிசையை தெரிவிப்பது நிரல்.
  • நிகழ்ச்சிகளின் வரிசையை தெரிவிப்பது, நிகழ்ச்சிநிரல். நீங்கள் திருமண அழைப்பிதழில் நிகழ்ச்சிநிரல் இருப்பதை கண்டிருப்பீர்.

பொதுவாக கணிணியலில், பொறிகளின் செயல்பாட்டிற்கான கட்டளைகளை / அறிவுரைகளை வரிசைப்படுத்தி கணிணிக்கு தெரிவிப்பது நிரல்.

நிரல் = Programme / Program

நிரலின் படிமுறைத் தீர்வு

ஒரு நிரல் எப்படி இயங்க வேண்டும் என்று படிபடியா கூறுவது நிரலின் படிமுறைத் தீர்வு.

நிரலின் படிமுறைத் தீர்வு = Program’s algorithm