Framework - ToolKit - Library அறிமுகம்

செயல்கூறு

செய்கிற செயலின் ஒரு பகுதி

Functionality = செயல்கூறு

திரட்டு

தொடர்புடைய பல செயல்கூறுகளின் தொகுப்பு தான் திரட்டு . >Library = திரட்டு

திரட்டுக்கு ஓர் நோக்கம் இருக்காது. பயனரின் நிரலின் பயன்படுத்த முறையின் மூலமே நோக்கம் வெளியாகும். உங்கள் நிரல் திரட்டுயின் நிரலை அழைக்கும்.

உங்கள் நிரல் திரட்டுயின் நிரலை அழைக்க பயன்படுத்தும் இடைமுகம் தான் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்

கருவித்தொகுதி

ஒன்றுக்கும் மேற்பட்ட திரட்டுகளின் /கருவிகளின் கூட்டு. கருவித்தொகுதி ஓர் குறிப்பிட்ட நோக்கமுண்டு.

பல கருவிகளின் இருப்பதால், பயனர் தம் தேவைக்கு ஏற்ப கருவிகளை தனித்தோ , கருவித்தொகுதியில் உள்ள வேறு கருவிகளோடு சேர்த்தோ பயன் படுத்தலாம்.

கருவித்தொகுதி பயன்படுத்த நெகிழ்வா இருக்கும் . ஆனால் கருவிகள் இணங்கிநடக்க செய்ய நிரலருக்கு *நிறைய வேலை இருக்கலாம்**.

Toolkit = கருவித்தொகுதி

உங்கள் நிரல் கருவித்தொகுதியின் நிரலை அழைக்கும்.

சட்டகம்

சட்டகதிற்கு என்று ஒரு தனி வடிவமைப்பு உண்டு , அவ்வடிவமைப்பை தழுவியே பயனர்கள் தங்கள் நிரலை வடிவமைக்க / நீட்சிக்க வேண்டும் .

Framework = சட்டகம் Flexbility = நெகிழ்வுதன்மை Extensibile = நீட்சிக்க

பயனருக்கு கிடைக்கும் நெகிழ்வுதன்மை குறைவு.

சட்டகவடிவமைப்பை தழுவியே இருப்பதால் நிரலர் செய்ய வேண்டிய வேலை குறைவு , பல வேலைகள் தானாய் நடக்கும்.

சட்டகநிரல் உங்கள் நிரலை அழைக்கும்.

கருத்துமூலம் :

http://stackoverflow.com/questions/3057526/framework-vs-toolkit-vs-library http://stackoverflow.com/questions/1415592/what-is-the-major-difference-between-a-framework-and-a-toolkit > Written with StackEdit.