Event அறிமுகம்

நிகழ்ச்சி / நிகழ்வு

பிற செயல்கள் நிகழ தூண்டுதலாய், இருக்கும் ஒரு வினைதான் நிகழ்ச்சி.

நிகழ்ச்சி (event ) நடப்பதாலும் / நிகழுவதாலும், அதனை நிகழ்வு (incident ) என்றும் சொல்லுவாங்க.

  1. அலைபேசியில் இருந்து கேட்கும் ஒலிப்பு, ஒரு நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி நம்மை அலைபேசியை எடுத்து பார்க்கவும் , பிறரிடம் பேசவும் தூண்டும்.

  2. பொங்கலின் திருநாளின் வருகை, ஒரு நிகழ்ச்சி, விவசாயிக்கு அறுவடைக்கு காலம் வந்துவிட்டது என உணர்த்தும்.

நிகழ்ச்சி என்று ஒன்று இருந்தால், விளைவு என்பது கட்டாயம் இருக்கும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அல்லவா ?

விளைவு தானாக வராது, நிகழ்ச்சியின் தூண்டுதலை ஏற்று,
கையாளுபவரை *நிகழ்வு-கையாளி ** (event handler *) என்று கூறலாம்.

ஒரு நிகழ்ச்சியின் தூண்டுதலை ஏற்ற *நிகழ்வு-கையாளி **, புதிதாய் **நிகழ்வுகளை உருவாக்கலாம். ( event-handler of an event can create new events )

Event screenshot