Encoding அறிமுகம்

தேவைபடுவன: 1. Google Chrome உலாவி 2. Windows Notepad / Notepad++ / Sublime செயலி

Google Chrome உலாவியில் இந்த தொடுப்பை http://ta.wikipedia.org/s/o0z போடுங்கள். இப்போ உங்கள் உலாவியினின் முகவரி பட்டியில் (address bar) இது தெரியும்.

https://ta.wikipedia.org/wiki/மென்பொருட்_பொறியியல்/

முகவரி பட்டியில் இருந்து URLலை நகல்எடுத்து , உங்க notepadல ஓட்டுங்க.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0 %AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE %9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF %E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

ஏன் எப்படி வருது? இங்க என்ன நடக்குது

  1. உலாவி “CTRL+C” கட்டளைக்கு ஏற்று, தரவை இடையக(ம்)த்தில் எழுத ஒரு செய்முறையை இயக்கும்.

  2. குறிப்பேட்டில் (notepad) “CTRL+V” கட்டளைக்கு ஏற்று இடையக(ம்)த்தில் உள்ள தரவை, தன் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள ஒரு செய்முறையை இயக்கும்.

செய்முறை என்னதான் பண்ணுது ?

குறிகளை ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஏற்றம் செய்கிறது குறியேற்றம்.

குறிகளை முறையாய் ஏற்றுவதால் குறிமுறையேற்றம் / குறிமுறையாக்கம் என்றும் சொல்லலாம்.

தொடர்புடைய வேறுசொற்கள்

  1. குறிமுறையாக்கு (encode)
  2. குறிமுறைநீக்கு (decode)
  3. குறிமுறையாக்கம் (encoding)
  4. குறிமுறைநீக்கம் (decoding)
  5. குறிமுறையாக்கி (encoder)
  6. குறிமுறைநீக்கி (decoder)

Written with StackEdit.