Expression & Conditional அறிமுகம்

கோவை

பொதுவா expression என்று சொன்னால் வெளிபடுத்துவது என்று பொருள்.

பலவற்றை ஒன்றாக சேர்ப்பது / தொகுப்பது கோவை.

கணக்கிடப்படும் குறிகளை / மாறிகளை சேர்த்து ஓர் விடயத்தை உணர்த்துவதால் அதனை கோவை என்று கணிதத்தில் சொல்லுவாங்க.

கணிதம்தான் கணிணியலின் அடிப்படை அதனால், expression என்பதை கோவை என்றே அழைக்கலாம்.

துணைநிலைத் தொடர்

ஒரு துணைநிலைத் சொற்தொடர் (clause), தனித்து இருக்காது. துணைநிலைத் தொடர், அடுத்து நிரல் என்ன வேலை செய்யணும் என்று கூறும் கட்டளைகளை வைத்திருக்கும்.

நிபந்தனை

ஒரு செயல் நடந்தால், அச்செயலை பொறுத்து வேற செயல்கள் நடக்கும். “நடந்தால்” என்பது ஒரு வரம்பு, எல்லை வரையறைக்கிறது.

வரையறுக்கபடும் எல்லையைதான் நாம் நிபந்தனை என்று அழைக்கிறோம்.

(ஆல்-வினையெச்ச விகுதி)

நிபந்தனை கூற்று

நிபந்தனைக் கூற்று = conditional statement

நிபந்தனைக் கூற்றின் பகுதிகள் 1. கோவை 2. பல துணைநிலைத் தொடர்கள்

பல்வேறு பாதைகள் வழியாக நிரல் ஓட்டம் நிகழ, நிபந்தனைக் கூற்றுகள் தேவை.

நிரலுக்கு எப்படி தெரியும் எந்த பாதையில் போகணும் என்று, அதை அறிய கூற்றின் கோவையை மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை மதிப்பீடும் ஒரு மதிப்பை தரும். வெவ்வேறு சூழலில் மதிப்பீடு வேறு மதிப்புகளை தரும்.

கிடைத்த மதிப்பிற்கு ஏற்ற, பாதை தேர்ந்தேடுத்து நிரல் ஓடும்.

பாதையில் என்ன இருக்கும் ?

துணைநிலைத் தொடர் இருக்கும்.

சொல்லியல்

  • நிபந்தனை condition
  • துணைநிலைத் சொற்தொடர் clause
  • கோவை expression
  • நிபந்தனைக் கூற்று conditional statement