ஒரு செயலை முறையாய் செய்து முடிக்க, வழிகாட்டுதல் தேவை.
ஏவல் (order) முறையில் அதிகாரத்தை வெளிபடுத்துவதால், வழிகாட்டுதல் கிடைக்கலாம். அப்படி அதிகாரம் செலுத்தி வழிகாட்டுவதை கீழுள்ளவாறு பிரிக்கலாம்.
- வழிகாட்டு ( directive )
- கட்டளை ( instruction )
- ஆணை / உத்தரவு ( command / mandate )
வழிகாட்டு(directive), என்பது பணிவான ஏவல் மூலம் வழிகாட்டுவதை குறிக்கும்.
கட்டளை / ஆணை என்றாலும் கிட்டதட்ட ஒரே பொருள்தான். கட்டளையிடபட்ட செயல்முறையில், அரிதாய் மாற்றங்கள் நிகழலாம், உங்களுக்கு மாற்ற ஒரு வாய்ப்பு இருப்பது போல இருக்கும்.
ஆணை, என்பது மிகுந்த வலிமையும் / ஆளுமையும் கொண்ட ஏவல், ஏவல் கூறுகிற செயல்முறையில் எந்த மாற்றமும் செய்வதற்கில்லை.
*எ.க. ** தமிழ்மொழி வழியாகத்தான் பள்ளி கல்லூரிகளில் பாடம் நடத்த வேண்டும், இது அரசு *ஆணை. {எந்த மாற்றமும் செய்வதற்கில்லை}
சமையல்குறிப்பு நூலில், கூறப்படும் குறிப்புகள் கட்டளை பொருளில் வரும். 1 லிட்டர், தண்ணீர் ஊற்றுங்க. நல்ல வதக்குங்க. {சின்ன சின்ன மாற்றங்கள் நீங்கள் செயலாம்}.
dictator/ சர்வாதிகாரி அனைத்தையும் பல கட்டளைகளையும் / ஆணைகளையிட்டு தன் ஆளுமைக்கு கீழே கொண்டிறுப்பவன்.
கணிணியில் முக்கிய கணக்கீடுகளை செய்வது செயலி (processor).
. >கணிணி, தானாய் எதுவும் செய்யாது. நாம் செயலிக்கு கட்டளைகளையும் ஆணைகளுமிட்டு நமக்கு தேவையான வேலைகளை செய்யச் சொல்வோம் ஒரு சர்வாதிகாரி போல.