உருப்படிகள் (item) / ஆட்கள் / வீடுகள் ஒன்றன் பின் ஒன்று தொடர்ந்து இருப்பது வரிகள் ஒன்றன் பின் ஒன்று தொடர்ந்து இருப்பது போல இருக்கிறது என்று அறிந்து “வரிசை” என பெயரிட்டான் தமிழன்.
“வரிசை” , தொடராய் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் கருப்பொருள்(abstract).
இப்படி முக்கிய விடயங்களை மட்டும் பெயர்த்து எடுப்பது கருப்பொருளாக்கம் (abstraction).
கருப்பொருள், நுணங்கிய / நுட்பமான விடயம் என்பதால் நுண்மம் என்றும் அழைக்கலாம்.
.
கருப்பொருள், பிழிந்து எடுத்ததால் பிழிவு என்றும் அழைக்கலாம்.
சொல்லியல்
- நுண்மம் = abstract(n)
- பிழிவு = abstract(n)
- கருப்பொருளாக்கம் = abstraction
- கருப்பொருளாக்கு = abstract(v)
- உருப்படி = item