நுட்பவேலைக் கடன் என்வென்று அறியும் முன் நாம் இருக்கும் சூழலை பற்றி பார்க்கலாம்.
மேம்படுத்துநர்கள் ஒரு ஆக்கப்பொரு{ள்}ளின் இயல்{பு}பை (feature) முறையாய் / சரியாய் வெளியிட நாம் இருக்கும் சூழலில் பல தடைகள் உண்டு.
1) நேரம் 2) தற்போதிய மூலக்குறியீடு (existing source code) [கட்டமைப்பு - வடிவமைப்பு முடிவுகள் => Architecture - Design Decisions]
குறியீடு கெட்டு போகுமா ? போகும். சரியாக பேணவில்லை என்றால் பாழாகும், புழுவெல்லாம் வராது கவலை கொள்ளவேண்டாம்.
குறியீடு பாழடையும் வகைகள்
1. முடக்கவழி [dormant] பயன் படுத்தாமல் / மாற்றங்களே பாராமல் இருக்கும் குறியீட்டால் கேடு வரும். குறியீடு மாறாமல் அதன் சூழல் மட்டும் மாறிவிட்டால், குறியீடு பிழைகள் எழ ஏதுவான இடமாகும் [errors/ bugs thrive], அதன் செயல்திறன் குன்றும் [performance degradation], சூழலுக்கு ஒவ்வாமையாகி [incompatible] விடும்.
2. செயல்படுவழி [active] புதுபுது தேவைகளால் குறியீடு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும். உட்படுத்தப்படுத்திய மாற்றம் முன் நிறுவிய ‘வடிவமைப்புக்கு முரணாய்’ கூட இருக்கலாம், நாம் கொண்ட ‘ஊகங்களை’ செல்லாததாக்கலாம். கால/நேர நெருக்கடி நம்மை குறியீட்டை/வடிவமைப்பை சீர்படுத்த (refactor)அனுமதிப்பதில்லை. நாம் என்ன மாற்றினோம் என்று ஆவணப்படுத்தவும் விடுவது இல்லை.
என்னங்க தொடர்பே இல்லாமல் பேசுறீங்க ?
நேரம் இல்லை என்று சொல்லி சரியாய் செய்ய வேண்டியதை செய்யாமல், தற்போதிய தேவை மட்டும் மனதில் கொண்டு குறியீட்டில் மாற்றங்களை செய்கிறோம். வேலை எச்சம் / மிச்சம் வைக்கிறோம்.
வள்ளுவரின் எச்சரிக்கை >வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும் கால் தீ எச்சம் போலத் தெறும். [Pending work, will hurt like half stopped fire]
உங்க வேலைய முடிவில்லையா ? - மேலாளர் பதற்றம்.
- மேலாளர் : மென்பொருள் வேலை செய்யுதே ?
- நிரலர் : இன்று வேலை செய்யும், நாளை எதையாவது மாற்றனுமா மிகவும் கடினம்.
- மேலாளர் : அப்புறம் பார்த்துக்கலாம்.
- நிரலர்: ‘கொஞ்சம் கடன் வாங்கி இருக்கோம்’
- மேலாளர் : கடனா ?
- நிரலர்: கடன் அடைக்கவில்லை என்றால் தரம் போய்விடும். [அப்போதாவது மனம் மாறுவாரா உங்க மேலாளர் ?]
- மேலாளர் : இல்லை அப்புறம் பார்த்துக்கலாம்.
- நிரலர்: இதை கடனா பார்கதீங்க , இதை மென்பொருளின் தரத்தை உயர செலுத்த வேண்டிய முதலீடு (தரமுதலீடு)
- மேலாளர் : முதலீடா தராளமா பண்ணுங்க.
- நிரலர்: எப்போதாவது புரிந்தே. ஒரு கோப்பை ‘குளம்பிநீர்’ சொல்லுப்பா.
அவருக்கு புறிய மாதிரி சொல்லணும் என்றால் “கொஞ்சம் கடன் வாங்கி இருக்கோம், நீங்க நேரம் கொடுத்தா கடன் அடைக்கலாம்” என்று உவமையாக சொல்லபடுவது தான் ‘நுட்பவேலைகடன்’.
கடன் என்று சொல்லுவது அவ்வளவு நல்ல இல்லையாம், அதை தரம் உயர செலுத்த வேண்டிய முதலீடு (தரமுதலீடு) என்று சொல்ல வேண்டுமாம்.
நீங்க கடனாளியா ? இல்லை மென்பொருளின் தரத்தில் முதலீடு பண்ணுபவரா ?